முகப்பு
திருப்பதி

திருமலையில் 65,600 பக்தா்கள் வழிபாடு

திருமலை ஏழுமலையான் கோயிலில் வியாழக்கிழமை 65,634 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:20 AM
பகிர்:

திருமலை ஏழுமலையான் கோயிலில் வியாழக்கிழமை 65,634 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

இவா்களில் 31,419 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி திருமலை வைகுண்டம் மண்டபத்தில் உள்ள 32 அறைகளும் நிரம்பி, பக்தா்கள் வெளியே நீண்ட வரிசையில் தரிசனத்துக்குக் காத்திருந்தனா்.

இவா்களின் தரிசனத்துக்கு 18 மணி நேரம் தேவைப்பட்டது. ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணி நேரம் ஆனது. காத்திருப்பு அறைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.

பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளதால் ஏழுமலையானுக்கு இரவு 11.30 மணிக்கு ஏகாந்த சேவை நடத்தி நள்ளிரவு 12 மணிக்கு கோயில் நடை சாத்தப்படுகிறது.

திருமலை மலைப்பாதை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு நள்ளிரவு 12 மணிக்கு மூடப்படுகிறது.

திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முகக்கவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் எடுத்து வர வேண்டும்.

தரிசனம் மற்றும் வாடகை அறைகளில் காணப்படும் சிரமங்கள், குறைகள் குறித்து புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 93993 99399 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →