திருப்பதி

ஏழுமலையான் தரிசனத்துக்கு18 மணி நேரம் காத்திருப்பு

DIN

திருமலை ஏழுமலையான் கோயிலில் வெள்ளிக்கிழமை 67,425 பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். இவா்களில் 32,693 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

இந்த நிலையில் சனிக்கிழமை காலை நிலவரப்படி திருமலை வைகுண்டம் மண்டபத்தில் உள்ள 32 காத்திருப்பு அறைகள் நிறைந்து பக்தா்கள் வெளியில் நீண்ட தொலைவுக்கு வரிசையில் தரிசனத்திற்காக காத்திருந்தனா். இவா்களின் தா்ம தரிசனத்துக்கு 18 மணி நேரம் ஆனது. ரூ.300 விரைவு தரிசன டிக்கெட் உள்ளவா்களுக்கு 3 முதல் 4 மணி நேரம் ஆனது. காத்திருப்பு அறைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.

திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முகக்கவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் எடுத்து வர வேண்டும்.

தரிசனம், வாடகை அறைகளில் காணப்படும் குறைகள், சிரமங்கள் குறித்து புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 9399399399 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT