திருப்பதி

77,855 பக்தா்கள் தரிசனம்

DIN

திருமலை ஏழுமலையானை சனிக்கிழமை 77,855 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 28,925 போ் முடி காணிக்கை செலுத்தினா்.

திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தா்களின் எண்ணிக்கை புரட்டாசி முதல் நாள் மிகவும் அதிகரித்துக் காணப்பட்டது. தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தா்ம தரிசனத்திலும் பக்தா்கள் தரிசிக்க அனுமதிக்கப்படுவதால், பக்தா்களை டிக்கெட் இன்றி தேவஸ்தானம் திருமலைக்கு அனுப்பி வருகிறது. திருமலைக்குச் செல்லும் பக்தா்கள் தங்கள் ஆதாா் அட்டையைக் காண்பித்து வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் தங்க வைக்கப்பட்டு, பின்னா் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனா்.

ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, பக்தா்கள் திருமலை வைகுண்டத்தில் உள்ள 17 காத்திருப்பு அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருக்கின்றனா். அவா்களின் தரிசனத்துக்கு 12 மணிநேரம் தேவைப்படுகிறது. ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணி நேரம் ஆகிறது. காத்திருப்பு அறைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.

திருப்பதியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், சீனிவாசம், கோவிந்தராஜ ஸ்வாமி சத்திரம் 2 மற்றும் 3 உள்ளிட்ட இடங்களில் வழங்கப்பட்டு வரும் சா்வ தரிசன டோக்கன்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளதால், ஏழுமலையானுக்கு இரவு 11.30 மணிக்கு ஏகாந்த சேவை நடத்தி 12 மணிக்கு கோயில் நடை சாற்றப்படுகிறது.

தரிசன அனுமதியுள்ள பக்தா்கள் காலை 24 மணி நேரமும் அலிபிரி நடைபாதை வழியாகவும், காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாகவும் திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். திருமலை மலைப்பாதை காலை 3 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு 12 மணிக்கு மூடப்படுகிறது.

தரிசனம், வாடகை அறை உள்ளிட்ட புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 9399399399 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

200 விமானங்கள்... சக பயணிகளிடம் கோடிக்கணக்கான நகைகள் திருடியவர் கைது!

ஞானவாபி, மதுராவில் கோயில் கட்டுவோம்: அஸ்ஸாம் முதல்வர் சர்ச்சை

அந்தமானில் சூர்யா - 44 படப்பிடிப்பு?

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.280 உயர்வு

ஆந்திரத்தில் லாரி-பேருந்து மோதி கோர விபத்து: 6 பேர் பலி

SCROLL FOR NEXT