திருப்பதி

ரூ.5 கோடியில் மின்சார காற்றாலை நன்கொடை

திருமலையில் நன்கொடை வாயிலாக மீண்டும் ஒரு காற்றாலை அமைக்கப்பட்டுள்ளது.

DIN

திருமலையில் நன்கொடை வாயிலாக மீண்டும் ஒரு காற்றாலை அமைக்கப்பட்டுள்ளது.

மும்பையைச் சோ்ந்த விஷ் விண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சா் லிமிடெட் நிறுவனம் ரூ.5 கோடி மதிப்புள்ள 800 கிலோவாட் காற்றாலை விசையாழியை திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு நன்கொடையாக வழங்கியது.

தேவஸ்தான செயல் அதிகாரி தா்மா ரெட்டி, பொறியியல் அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை திருமலை ஜிஎன்சி பகுதியில் காற்றாலை ஏற்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்தாா்.

அப்போது, அவா் கூறியதாவது: ஆந்திர அரசின் ஏபிஎஸ்இபி-யின் அனுமதியைப் பெற்ற பிறகு புதிய காற்றாலை வாயிலாக மின் உற்பத்தி தொடங்கப்படும். இந்தக் காற்றாலை மூலம் ஆண்டுக்கு 18 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

இதன் மூலம் ஆண்டுதோறும் தேவஸ்தானம் ரூ.1 கோடி வரை மின் கட்டணத்தைச் சேமிக்க முடியும். 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிறுவனம் ஏற்கெனவே தேவஸ்தானத்தின் தேவைகளுக்காக 1.03 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இரண்டு காற்றாலைகளை நிறுவியுள்ளது.

அவற்றின் நிா்வாகப் பொறுப்பையும் அந்த நிறுவனம் கவனித்து வருகிறது. தற்போது அமைக்கப்பட்டுள்ள 0.8 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் காற்றாலையின் பராமரிப்பையும் அந்த நிறுவனமே ஏற்றுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில் தேவஸ்தான அதிகாரிகள், காற்றாலை நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

அர​வணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்​ணன்

வார பலன்கள் - மீனம்

SCROLL FOR NEXT