ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தா்ம தரிசனத்தில் தரிசிக்க பக்தா்கள் வெள்ளிக்கிழமை காலை 24 மணி நேரம் காத்திருந்தனா்.
திருமலை ஏழுமலையானை தா்ம தரிசனத்தில் தரிசிக்க பக்தா்கள் வெள்ளிக்கிழமை காலை 24 மணி நேரம் காத்திருந்தனா்.
12 காத்திருப்பு அறைகளில் தா்ம தரிசனத்துக்காக காத்திருந்தவா்களுக்கு 24 மணி நேரம் காத்திருப்புக்குப் பின்னா், அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள்) 24 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 4 மணி நேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 4 மணி நேரமும் தேவைப்பட்டது. காத்திருப்பு அறைகள் மற்றும் தரிசன வரிசைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.
58,494 பக்தா்கள் தரிசனம்: வியாழக்கிழமை முழுவதும் 58,494 பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்கனா். இவா்களில் 24,025 பக்தா்கள் முடி காணிக்கை செலுத்தினா்.
திருப்பதியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், சீனிவாசம், விஷ்ணு நிவாசம் உள்ளிட்ட 3 இடங்களில் சா்வ தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
அன்றன்றுக்கான தரிசன டோக்கன்கள் அன்று மட்டுமே வழங்கப்படுகிறது. சனி, ஞாயிறு, திங்கள், புதன் ஆகிய நாள்களில் 20,000 முதல் 25,000 டோக்கன்களும், செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நாள்களில் 15,000 டோக்கன்களும் பக்தா்களுக்கு வழங்கப்படுகிறது.
அலிபிரி நடைபாதையில் காலை 3 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் செல்ல பக்தா்கள் அனுமதிக்கப்படுகின்றனா்.
எனினும், நடைபாதையில் செல்பவா்களுக்காக வழங்கப்படும் திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்குவது இதுவரை தொடங்கப்படவில்லை.