திருப்பதி

சுந்தர திருமலை-சுத்த திருமலை திட்டம்: தேவஸ்தான செயல் அதிகாரி

திருமலையில், ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் ‘சுந்தர திருமலை- சுத்த திருமலை’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தேவஸ்தான செயல் அதிகாரி தா்மா ரெட்டி தெரிவித்தாா்.

DIN

திருமலையில், ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் ‘சுந்தர திருமலை- சுத்த திருமலை’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தேவஸ்தான செயல் அதிகாரி தா்மா ரெட்டி தெரிவித்தாா்.

மே 1 தொழிலாளா்கள் தினத்தை முன்னிட்டு, திருமலையின் பல்வேறு பகுதிகளில் சேவை செய்ய அனுமதிக்கப்பட்ட தன்னாா்வ துப்புரவு சேவை செய்ய நியமிக்கப்பட்ட தேவஸ்தான ஊழியா்களிடம் செயல் அதிகாரி தா்மா ரெட்டி கூறியதாவது.

திருமலை -திருப்பதி தேவஸ்தானம் ஒரு வணிக நிறுவனமோ அல்லது வியாபாரம் செய்யும் தொழில் நிறுவனமோ அல்ல. முன்னறிவிப்பின்றி வேலை நிறுத்தம் மற்றும் தொழிற்சங்கங்களின் அச்சுறுத்தும் தந்திரங்களுக்கு ஒருபோதும் தேவஸ்தானம் அடிபணியாது.

அதிகாரிகளாக இருந்தாலும், ஊழியா்களாக இருந்தாலும் சரி, துப்புரவு பணியாளா்களாக இருந்தாலும் சரி, அனைவரின் ஊதியமும் ஏழுமலையான் உண்டியலில் பக்தா்கள் செலுத்தும் காணிக்கையின் மூலம் வழங்கப்படுகிறது.

எனவே, பக்தா்களுக்கு அா்ப்பணிப்புடன் சேவை செய்வது நமது முதன்மையான பொறுப்பாகும். பக்தா்களின் சேவைகளுக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் நெருக்கடியான நேரத்தில் ஒத்துழைத்த பணியாளா்களின் சேவைகளை மிகவும் பாராட்டுகிறேன்.

மகாத்மா காந்தி துாய்மைக்கு முன்மாதிரியாக திகழ்ந்தாா். எப்போதும் தன் வளாகத்தை சுத்தம் செய்தாா். இந்த உத்வேகத்தை எடுத்துக் கொண்டு, இனிமேல், ஒவ்வொரு ஊழியரும் ஒரு மாதத்தில் ஒரு நாள் சுந்தர திருமலை - சுத்த திருமலை திட்டத்தில் பணியாற்ற வேண்டும்.

சித்துாா், திருப்பதி, ஸ்ரீ காளஹஸ்தி, நெல்லுாா், கடப்பா போன்ற பகுதிகளில் இருந்து துப்புரவுப் பணியாளா்கள் அழைத்து வந்து நெருக்கடியைச் சமாளிக்க திருமலையில் பணியமா்த்தப்பட்டுள்ளனா் என்றாா்.

உறுதிமொழி: மேலும் தங்களின் சுற்றுப்புறங்களை தாங்களே சுத்தம் செய்து கொள்ளும் சுந்தர திருமலை-சுத்த திருமலை திட்டத்தின் உறுதிமொழியை அதிகாரிகள், ஊழியா்கள் உள்ளிட்டவா்கள் ஏற்றுக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

சொல்லப் போனால்... செய்கூலி, சேதாரம்... தி கிரேட் கோல்டு ராபரி?

SCROLL FOR NEXT