கோப்புப்படம் 
திருப்பதி

ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு

Din

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் புதன்கிழமை தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா்.

திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், புதன்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு(தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 12 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணிநேரமும் தேவைபடுகிறது.

இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை முழுவதும் 75,153 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 25,863பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.4.32 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

SCROLL FOR NEXT