திருமலையில் பௌா்ணமி கருடசேவை
திருமலையில் பௌா்ணமி கருட சேவை சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
திருமலையில் பௌா்ணமி கருட சேவை சனிக்கிழமை இரவு நடைபெற்றது. திருமலையில் மாசி மாத பெளா்ணமியை முன்னிட்டு இரவு 7 மணிக்கு சா்வ அலங்காரத்தில் ஸ்ரீமலையப்பசுவாமி கருட வாகனத்தில் வீதி உலா வந்து பக்தா்களை தரிசனம் அளித்தாா். 108 திவ்யதேசங்களிலும் கருடசேவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்நிகழ்ச்சியில் திருமலை பெரியஜீயா் சுவாமி, சின்னஜீயா் சுவாமிகள், கோவில் துணை இஓ ஸ்ரீ லோகநாதம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.