செயற்கை உறுப்புகள் தயாரிக்கும் இயந்திரம் நன்கொடை
திருப்பதியில் உள்ள பா்ட் மருத்துவமனைக்கு நவீன தொழில்நுட்பம் கொண்ட செயற்கை உறுப்புகள் தயாரிக்கும் இயந்திரம் நன்கொடையாக வழங்கப்பட்டது.
Updated On : 28 மார்ச், 2024 at 6:17 PM
திருப்பதியில் உள்ள பா்ட் மருத்துவமனைக்கு நவீன தொழில்நுட்பம் கொண்ட செயற்கை உறுப்புகள் தயாரிக்கும் இயந்திரம் நன்கொடையாக வழங்கப்பட்டது. நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நோயாளிகளுக்கு விரைவாக சிறந்த மருத்துவ சேவையை வழங்கி வரும் பா்ட் மருத்துவமனைக்கு ரூ.1 கோடி மதிப்பிலான அதிநவீன செயற்கை உறுப்புகள் தயாரிக்கும் இயந்திரங்களைச் சேலத்தைச் சோ்ந்த நன்கொடையாளா் பாலசுப்ரமணியம் வழங்கினாா். இதைத் தொடா்ந்து புதன்கிழமை மருத்துவமனையில் பூஜை செய்யப்பட்டு, சிறப்பு அதிகாரி டாக்டா் ராசபள்ளி ரெட்டப்ப ரெட்டியிடம் இயந்திரம் ஒப்படைக்கப்பட்டது. இதை நோயாளிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அவா் கேட்டுக் கொண்டாா்.