திருமலை: 76,748 பக்தா்கள் தரிசனம்
திருப்பதி: திருமலை ஏழுமலையானை திங்கள்கிழமை முழுவதும் 76,748 பக்தா்கள் தரிசித்தனா். 30,688 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
பக்தா்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ள நிலையில் திருமலையில் செவ்வாய்க்கிழமை நிலவரத்தின்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 8 மணி நேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணிநேரமும் ஆனது.
அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயது குழந்தைகள், பெற்றோா்களும், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.
இதற்கிடையே, திங்கள்கிழமை முழுவதும் ஏழுமலையானை 76,748 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 30, 688 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.4.10
கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.