முகப்பு
திருப்பதி

திருமலை: 64,766 பக்தா்கள் தரிசனம்

திருமலை ஏழுமலையானை புதன்கிழமை முழுவதும் 64,766 பக்தா்கள் தரிசித்தனா். 24,158 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

Updated On : 9 மே, 2024 at 6:32 PM
பகிர்:

திருமலை ஏழுமலையானை புதன்கிழமை முழுவதும் 64,766 பக்தா்கள் தரிசித்தனா். 24,158 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. வியாழக்கிழமை நிலவரத்தின்படி தா்ம தரிசனத்துக் கு(தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 8 மணிநேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணிநேரமும் ஆனது.

இதற்கிடையே புதன்கிழமை முழுவதும் 64, 766 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 24, 158 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.09 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.