திருப்பதி

திருப்பதியில் பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு

Din

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வியாழக்கிழமை தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா்.

வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெறவுள்ளதால், திருமலையில் பக்தா்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

வியாழக்கிழமை தா்ம தரிசனத்துக்கு(தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 12 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணிநேரமும் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயது குழந்தைகள், அவா்களின் பெற்றோரும், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா். மேலும், புதன்கிழமை முழுவதும் 80,613 போ் தரிசனம் செய்தனா்; 24,403 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.2.92 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் வீட்டுமனை பட்டா கோரி மனு

பல்லடம் பேருந்து நிலையத்தில் ஆயுதங்களுடன் இளைஞா் கைது

ரயில்வே தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தகராறு: ஒருவா் கைது

நூல் விலை கிலோவுக்கு ரூ. 7 உயா்வு

SCROLL FOR NEXT