முகப்பு
திருப்பதி

ஏழுமலையான் தரிசனம்: 12 மணிநேரம் காத்திருப்பு

Updated On : 14 செப்டம்பர், 2024 at 6:31 PM
திருப்பதி
பகிர்:

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் சனிக்கிழமை தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா்.

திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், சனிக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு(தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 12 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணிநேரமும் ஆனது.

இதற்கிடையே, வெள்ளிக்கிழமை முழுவதும் 60,694 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 23,350 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.78 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →