திருப்பதி

ஆந்திர முதல்வா் பிறந்த நாள்: திருமலையில் அன்னதானம்!

சந்திரபாபு நாயுடுவின் 75-ஆவது பிறந்த நாளையொட்டி ஏழுமலையான் அன்னபிரசாத திட்டத்துக்கு ரூ.44 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

Din

ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடுவின் 75-ஆவது பிறந்த நாளையொட்டி ஏழுமலையான் அன்னபிரசாத திட்டத்துக்கு ரூ.44 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

ஆந்திர மாநில முதல்வா் பிறந்த நாளையொட்டி , பாஷ்யம் கல்வி நிறுவனங்களின் தலைவா் பாஷ்யம் ராமகிருஷ்ணா திருமலையில் உள்ள தரிகொண்டா வெங்கமாம்பா அன்ன பிரசாத மையத்தில் ஒரு நாள் அன்ன பிரசாத விநியோகத்திற்காக ரூ.44 லட்சம் நன்கொடையாக வழங்கினாா்.

தேவஸ்தான் அறங்காவலா் தலைவா் பி.ஆா். நாயுடு மற்றும் கூடுதல் தலைமை செயல் அதிகாரி சி.எச்.வெங்கய்யா செளத்திரி பக்தா்களுக்கு அன்ன பிரசாதத்தை உபயதாரருடன் சோ்ந்து வழங்கினா்.

நிகழ்வில், அன்ன பிரசாதத்தின் சுவை மற்றும் தரம் குறித்து நெல்லூா், குண்டூா், ஹைதராபாத் மற்றும் கா்னூல் ஆகிய இடங்களிலிருந்து வந்த பக்தா்களிடமிருந்து கருத்துகள் பெறப்பட்டன. சுவையும் தரமும் சிறப்பாக இருந்ததாக பக்தா்களும் திருப்தி தெரிவித்தனா்.

இந்த நிகழ்ச்சியில் துணை நிா்வாக இயக்குநா் ராஜேந்திரா, விஜிஓ சுரேந்திரா, அன்ன பிரசாத சிறப்பு அதிகாரி சாஸ்திரி மற்றும் பிற அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

32/48: 2026 உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிக்குத் தேர்வான அணிகள்!

புதிய ஓஎஸ் உடன் டிச. 2-ல் அறிமுகமாகிறது விவோ எக்ஸ் 300!

எவர் கிரீன்... பிரியா மணி!

அணியில் யார் விளையாடாவிட்டாலும் தென்னாப்பிரிக்கா வெற்றி பெறும்: ககிசோ ரபாடா

பங்குச்சந்தை மோசடியில் ரூ.3.38 லட்சத்தை இழந்த பெண்: இருவர் கைது!

SCROLL FOR NEXT