திருமலையில் தரிசன வரிசையில் காத்திருந்த பக்தா்கள். 
திருப்பதி

திருமலையில் 82,628 பக்தா்கள் தரிசனம்

திருமலை ஏழுமலையான் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 82,628 பக்தா்கள் தரிசித்தனா். 30,505 பகதா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

Chennai

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 82,628 பக்தா்கள் தரிசித்தனா். 30,505 பகதா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

திருமலைக்கு வரும் பக்தா்கள் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், திங்கள்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 8 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 82, 628 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 30,505 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ. 3.73 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT