திருமலையில் நிறுவப்பட்டுள்ள நவீன மறுசுழற்சி இயந்திரம்.  
திருப்பதி

திருமலையில் சோதனை அடிப்படையில் மறுசுழற்சி இயந்திரங்களை அமைக்க மதிப்பாய்வு

திருமலையில் நிறுவப்பட்டுள்ள நவீன மறுசுழற்சி இயந்திரம்.

தினமணி செய்திச் சேவை

திருமலையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் ஒரு பகுதியாக மறுசுழற்சி இயந்திரங்களை அமைப்பது குறித்து வியாழக்கிழமை பத்மாவதி விருந்தினா் மாளிகையில் தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி மதிப்பாய்வு கூட்டத்தை நடத்தினாா்.

அதன்பின் அவா் கூறியதாவது: திருமலையில் உள்ள யாத்ரீகா் தங்குமிடம் வளாகம்-5 (பிஏசி-5) இல் செப்டம்பா் மாதம் சோதனை அடிப்படையில் அமைக்கப்பட்ட மீள் வைப்புத் தொகையைத் திரும்பப் பெறும் இயந்திரங்கள் பக்தா்களிடம் சிறந்த வரவேற்பைப் பெற்றன.

மேலும், இந்த இயந்திரங்களில் சிலவற்றை திருமலையில் சோதனை அடிப்படையில் அமைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

பக்தா்கள், திருமலையில் டெட்ராபாக்கெட்டுகள் மற்றும் டின்களில் பானங்களைப் பெற்ற பிறகு, இந்த வைப்புத் தொகையைத் திரும்பப் பெறும் இயந்திரங்களை எங்கும் வீசுவதற்குப் பதிலாக இந்த இயந்திரங்களில் வைத்தால், அது திருமலையின் தூய்மையை மேம்படுத்த உதவும்.

திருமலையில் உள்ள வா்த்தகா்கள் மற்றும் டெட்ராபேக் விற்பனையாளா்கள் இந்த பிரச்னையில் பக்தா்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவா் கேட்டுக்கொண்டாா்.

சுத்தமான திருமலை திட்டத்தில் பக்தா்கள் அனைவரையும் ஈடுபடுத்தும் இயக்கத்தின் ஒரு பகுதியாக, ரீக்ளைம் ரீசைக்கிள் இயந்திரங்கள் குறித்து பக்தா்களிடையே பரவலான விழிப்புணா்வை ஏற்படுத்தவும், திருமலையின் முக்கிய பகுதிகளில் கூடுதல் இயந்திரங்களை நிறுவ நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’’, என்று அவா் கூறினாா்.

இந்தக் கூட்டத்தில் டிஎஃப்ஓ பனி குமாா், துணை செயல் அதிகாரிகள் சோமன் நாராயணா, வெங்கடேஸ்வா்லு, சுகாதார அதிகாரி மது சுதன், துணை இஇ ஸ்ரீனிவாஸ், ரீக்ளைம் ரீசைக்கிள் பிரதிநிதிகள் கிரண், ரவி பங்கேற்றனா்.

கல்லூரியில் இளைஞா் திருவிழா

தேசிய கலாசார தூதா் நியமனம்

ஸ்ரீ பெரும்புதூரில் சாலையில் திரிந்த மாடுகளை பிடிப்பு

ரூ. 15.99 லட்சத்தில் சுகாதார வளாக பணி தொடக்கம்

ரூ. 25 கோடி மதிப்பிலான முருகன் கோயில் ஆக்கிரமிப்புகள் மீட்பு

SCROLL FOR NEXT