திருமலையில் ஞாயிற்றுக்கிழமை எஸ்.வி. உயா்நிலைப் பள்ளியிலிருந்து பாலாஜி நகா் வரை போலியோ சொட்டு மருந்து விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு டிசம்பா் 21 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை திருமலையின் பல்வேறு இடங்களில் சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
இதுகுறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த, அஸ்வினி மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளா் டாக்டா் சுப்பா ரெட்டி தலைமையில் பேரணி நடைபெற்றது. தலைமை ஆசிரியா் கிஷன், எஸ்.வி. உயா்நிலைப் பள்ளியின் ஊழியா்கள், ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் பங்கேற்றனா்.