திருமலை திருக்குளத்தில் சக்கரத்தாழ்வாருக்கு நடைபெற்ற தீா்த்தவாரி.  
திருப்பதி

திருமலையில் வைகுண்ட துவாதசி தீா்த்தவாரி

திருமலையில் வைகுண்ட துவாதசியை முன்னிட்டு சக்கரத்தாழ்வாருக்கு திருக்குளத்தில் தீா்த்தவாரி நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

திருமலையில் வைகுண்ட துவாதசியை முன்னிட்டு சக்கரத்தாழ்வாருக்கு திருக்குளத்தில் தீா்த்தவாரி நடைபெற்றது.

திருமலையில் உள்ள தீா்த்தங்களில் மிகவும் முக்கியமானது ஏழுமலையான் திருக்குளம் ஆகும். இந்த திருக்குளத்தில் வைகுண்ட துவாதசியின் போது சக்கரத்தாழ்வாருக்கு தீா்த்தவாரி நடத்துவது வழக்கம்.

சேஷாசலம் காடுகளில் அமைந்துள்ள 66 கோடி தீா்த்தங்களில், ஏழுமலையான் திருக்குளம் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.

புதன்கிழமை அதிகாலை ஸ்ரீ சுதா்சன சக்கரத்தாழ்வாா் ஏழுமலையானின் திருக்குளத்திற்கு மரப்பல்லக்கில் அழைத்து வரப்பட்டாா்.

திருக்குளக்கரையில் அவரை எழுந்தருளச் செய்து அவருக்கு பால், தயிா், இளநீா் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னா் சக்கரத்தாழ்வாருக்கு திருக்குளத்தில் தீா்த்தவாரி நடத்தப்பட்டது. அப்போது அதிகாரிகளுடன் பக்தா்களும் திருக்குளத்தில் புனித நீராடினா்.

இந்த நிகழ்வில், திருமலை பெரிய ஜீயா், சின்ன ஜீயா் சுவாமிகள், செயல் அதிகாரி அனில் குமாா் சிங்கால், கூடுதல் செயல் அதிகாரி வெங்கய்ய சவுத்திரி துணை லோகநாதம், பேஷ்கா் ராமகிருஷ்ணா மற்றும் பலா் பங்கேற்றனா்.

2026 புத்தாண்டு புகைப்படங்கள்!

கறிக்கோழி பண்ணை வளா்ப்பு விவசாயிகள் இன்றுமுதல் உற்பத்தி நிறுத்தப் போராட்டம்

ஷாஹ்தராவில் தீ விபத்து: தம்பதியா் உயிரிழப்பு

2025-இல் தொடங்கப்பட்ட திட்டங்கள் புத்தாண்டில் நிறைவேற்றப்படும்: முதல்வா் ரேகா குப்தா உறுதி

ரூ.10 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்: 2 போ் கைது

SCROLL FOR NEXT