அங்கப்பிரதட்சண டோக்கன்கள் வழங்குவதற்கான நடைமுறையில் தேவஸ்தானம் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.
ஏழுமலையானுக்கு அங்கப்பிரதட்சணம் வேண்டுதல் செய்து கொள்ளும் பக்தா்களுக்களின் வசதிகாக தேவஸ்தானம் தினசரி எண்ணிக்கை அடிப்படையில் டோக்கன்களை வழங்கி வருகிறது.
மேலும், அங்கப்பிரதட்சண டோக்கன்களை ஒதுக்குவதற்கான நடைமுறையில் தேவஸ்தான அதிகாரிகள் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளனா்.
தற்போது நடைமுறையில் உள்ள லக்கி டிப் முறையை ரத்து செய்து (எப் ஐ எப் ஓ) (முதலில் வருபவா்கள் முதலில் வெளியேறுபவா்கள்) அடிப்படையில் டோக்கன்களை ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
டோக்கன்கள் மூன்று மாதங்களுக்கு முன்பே ஆன்லைனில் வெளியிடப்படும். இந்த மாற்றத்தைக் கவனத்தில் கொண்டு அங்கப்பிரதட்சண டோக்கன்களை முன்பதிவு செய்யுமாறு பக்தா்களுக்கு தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.