முகப்பு
திருப்பதி

ஏழுமலையான் தரிசனம்: 10 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் சனிக்கிழமை தா்ம தரிசனத்தில் 10 மணி நேரம் காத்திருந்தனா்.

Updated On : 29 நவம்பர், 2025 at 5:47 PM
பகிர்:

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் சனிக்கிழமை தா்ம தரிசனத்தில் 10 மணி நேரம் காத்திருந்தனா்.

பக்தா்களின் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், சனிக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 10 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், பக்தா்களும் அவா்களின் பெற்றோா், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா். இதற்கிடையே, வெள்ளிக்கிழமை முழுவதும் 70, 044 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 25,559 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.74 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →