திருப்பதி

ஏழுமலையான் தரிசனம்: 24 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வியாழக்கிழமை தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனா். வேண்டி உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வியாழக்கிழமை தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனா். வேண்டி உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், வியாழக்கிழமை நிலவரப்படி 31 காத்திருப்பு அறைகள் நிறைந்து வெளியே

அமா்ந்திருந்தனா்.

தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 24 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

இதற்கிடையே, புதன்கிழமை முழுவதும் 74,897 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 32, 802 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.64 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

பிஜிடி தொடரை விட அதிக பார்வையாளர்கள்: ஆஷஸ் டெஸ்ட்டில் புதிய வரலாறு!

இதுவரை 6.16 கோடி பேருக்கு படிவம் வழங்கப்பட்டுள்ளது: தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி

மறுவெளியீட்டிலும் வெற்றி பெற்ற ஆட்டோகிராஃப்: நன்றி தெரிவித்த சேரன்!

கடின உழைப்பு, விடாமுயற்சி... பார்வையற்றோருக்கான உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு மோடி புகழாரம்!

நடிகர் தர்மேந்திரா காலமானார்!

SCROLL FOR NEXT