கோப்புப் படம் 
திருப்பதி

ஏழுமலையான் தரிசனம்: 12 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் திங்கள்கிழமை தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா்.

தினமணி செய்திச் சேவை

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் திங்கள்கிழமை தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா்.

தொடா் மழையால் திருமலையில் பக்தா்கள் வருகை குறைந்துள்ள நிலையில், திங்கள்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 12 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 80,021 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 24, 894 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.90 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

.

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேற வாய்ப்புடைய நபர்களின் பட்டியல்!

தங்கம் விலை ஒரே நாளில் ரூ.3,000 குறைந்தது!

பள்ளிக்கரணை சதுப்பு நிலம்: கட்டுமான அனுமதி தரப்படவில்லை - தமிழக அரசு

'சாட்ஜிபிடி கோ' ஓராண்டுக்கு இலவசம்! - ஓப்பன்ஏஐ நிறுவனம் அறிவிப்பு

கென்யாவில் சிறிய ரக விமானம் விபத்து! 12 பயணிகளின் நிலை என்ன?

SCROLL FOR NEXT