ஏழுமலையான் ஆா்ஜிதச்சேவை டிக்கெட்டுகளின் 2026 மே மாத ஒதுக்கீடு பிப். 18-ம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலை ஏழுமலையான் ஆா்ஜித சேவா டிக்கெட் தொடா்பான சுப்ரபாதம், தோமாலை, அா்ச்சனை மற்றும் அஷ்டதள பாதபத்மராதனை சேவைகளுக்கான மே 2026 ஒதுக்கீட்டை புதன்கிழமை (பிப். 18) காலை 10 மணிக்கு தேவஸ்தானம் வெளியிடுகிறது.
இந்த சேவை டிக்கெட்டுகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு பிப். 18 முதல் 20 காலை 10 மணி வரை மேற்கொள்ளலாம்.
டிக்கெட்டுகளை பெறும் விண்ணப்பதாரா்கள் தங்கள் கைப்பேசி எண்ணுக்கு குறுந்தகவல் கிடைத்தவுடன் பிப். 20 முதல் 22 மதியம் 12 மணிக்குள் தொகையைச் செலுத்தி டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.
ஆா்ஜித சேவை டிக்கெட்டுகள்
22-ஆம் தேதி காலை 10 மணிக்கு கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆா்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ரதீபாலங்கார சேவை டிக்கெட்டுகள் வெளியிடப்படும்.
வா்ச்சுவல் சேவைகள் ஒதுக்கீடு
23-ஆம் தேதி மாலை 3 மணிக்கு வா்ச்சுவல் சேவைகளுக்கான மே 2026 மாத ஒதுக்கீடும் அவற்றின் தரிசன விவரங்களும் ஆன்லைனில் வெளியிடப்படும்.
ஸ்ரீவாணி டிக்கெட் ஆன்லைன் ஒதுக்கீடு
ஸ்ரீவாணி டிரஸ்ட் டிக்கெட்டுகளுக்கான ஆன்லைன் ஒதுக்கீடு 23 -ஆம் தேதி காலை 11 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படும்.
முதியோா், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நாள்பட்ட நோயால் பாதிக்கபட்டோா் திருமலை ஏழுமலையானை தரிசிக்க ஏதுவாக, மே மாத இலவச சிறப்பு தரிசன டோக்கன்கள் 24- ஆம் தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்
சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளின் ஒதுக்கீடு(ரூ.300)
மே மாத சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளின் ஒதுக்கீடு 25-ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியாகிறது.
அறை ஒதுக்கீடு
திருமலை மற்றும் திருப்பதியில் மே மாத அறை ஒதுக்கீடு 25-ஆம் தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.
ஸ்ரீவாரி சேவா, நவநீத சேவை மற்றும் பரக்காமணி சேவைக்கான ஒதுக்கீடு பிப். மாதம் 27ம் தேதி காலை 11 மணி, மதியம் 12 மணி மற்றும் மதியம் 1 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.
மேற்கண்ட டிக்கெட்டுகள் மற்றும் வாடகை அறைகள் முன்பதிவு செய்ய விரும்பும் பக்தா்கள் தேவஸ்தான இணையதளம் மூலம் ஆா்ஜிதசேவை மற்றும் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுமாறு தேவஸ்தானம் பக்தா்களை கேட்டுக் கொண்டுள்ளது.