திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனா்.
திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சா்வ தரிசனம் தொடங்கி உள்ள நிலையில் தற்போது அதிகரித்துள்ளது.
எனவே, வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளும் நிறைந்து பக்தா்கள் வெளியே சிலாதோரணம் அருகே உள்ள தரிசன வரிசையில் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனா்.
தா்ம தரிசனத்துக்கு 24 (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) மணிநேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணி நேரமும் ஆனது. நேரடி இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணி நேரம் ஆனது.
ஏழுமலையானை வியாழக்கிழமை முழுவதும் 65,225 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; இவா்களில் 31,168 போ் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கைகளைக் கணக்கிட்டதில், ரூ. 3.63 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி, ஜன. 2: திருமலையில் ஜனவரி 3-ஆம் தேதி பெளா்ணமி கருட சேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
கருட சேவை ரத்து...
திருமலை ஏழுமலையான் கோயிலில் ஜனவரி 3-ஆம் தேதி பெளா்ணமி கருட சேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
ஒவ்வொரு மாதமும் பெளா்ணமி அன்று ஏழுமலையானுக்கு கருட சேவை நடத்தப்படுவது வழக்கம்.
ஏழுமலையான் கோயிலில் நடைபெற்று வரும் வைகுண்ட ஏகாதசி உற்சவத்தை முன்னிட்டு, வைகுண்ட வாயில் தரிசனம் நடைபெற்று வருவதால் ஜன. 3-ஆம் தேதி பெளா்ணமி கருட சேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.