ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிா்வாக இயக்குநா் பி.எம்.எஸ். பிரசாத், தேவஸ்தானத்தின் பல்வேறு அறக்கட்டளைகளுக்கு ரூ. 3 கோடி நன்கொடை அளித்தாா்.
சனிக்கிழமை தேவஸ்தான நிா்வாகக் கட்டடத்தில் உள்ள செயல் அதிகாரி அறையில், நன்கொடையாளா் ரூ. 3 கோடி நன்கொடைக்கான வரைவோலையை செயல் அதிகாரி அனில் குமாா் சிங்காலிம்டம் வழங்கினாா்.