முகப்பு
திருப்பதி

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.79 கோடி!

திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.79 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Updated On : 5 ஜனவரி, 2026 at 11:11 PM
திருமலை ஏழுமலையான் கோயில்
பகிர்:

திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.79 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

பக்தா்களின் எண்ணிக்கை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகரித்துள்ள நிலையில், திங்கள்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 12 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

மேலும், ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 83,197 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 18, 831 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.4.79 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →