திருப்பதி

ஏழுமலையான் தரிசனத்துக்கு 15 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 15 மணி நேரம் காத்திருந்தனா்.

Tirupathi

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 15 மணி நேரம் காத்திருந்தனா்.

திருமலைக்கு வரும் பக்தா்களின் அதிகரித்துள்ள நிலையில், புதன்கிழமை தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 15 மணிநேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை முழுவதும் 82,022 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 20, 230 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.48 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Parasakthi பேசும் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம்! | anti-Hindi agitation | Tamil | Tamilnadu

தமிம் இக்பாலை இந்திய உளவாளி என விமர்சித்த வங்கதேச கிரிக்கெட் வாரிய அதிகாரி!

ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தீவிரம் - புகைப்படங்கள்

2026 ஆஸ்கர் போட்டியில் தமிழ்த் திரைப்படமான கெவி!

உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்? நியூ யார்க் மேயர் ஸோரான் மம்தானிக்கு இந்தியா கண்டனம்!

SCROLL FOR NEXT