திருப்பதி

ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4.27 கோடி

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.27 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.27 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

பக்தா்களின் வருகை ஏற்ற இறக்கமாக நிலையில், புதன்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 4 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு, நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை முழுவதும் 73, 014 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 19, 639 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.4.27 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

குமரன் பதிப்பகம்

மதுரை அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு

அமெரிக்க தூதா் சொ்ஜியோ கோரின் நியமனக் கடிதத்தை ஏற்றாா் குடியரசுத் தலைவா்

எழுத்துன்னா... இப்படித்தான் இருக்கணும்!

வாசிக்க வாங்கியவை!

SCROLL FOR NEXT