திருமலை ஏழுமலையான் கோயில் கோப்புப் படம்
திருப்பதி

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.35 கோடி

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ4.35 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ4.35 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், சனிக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு 10 (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனம், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

மேலும்,வெள்ளிக்கிழமை முழுவதும் 69, 254 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 20,954 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.4.35 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தொழிலாளியைத் தாக்கிய மற்றொரு தொழிலாளி கைது

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி வேலைநிறுத்தம்! ஆக்டோ ஜியோ மாநாட்டில் தீா்மானம்

போலி ஃபேஸ்புக் கணக்கு தொடா்பாக பாஜக எம்.பி. மனோஜ் திவாரி புகாா்

ஹெச். ராஜாவுக்கு ஏற்பட்ட பக்கவாத பாதிப்புக்கு சிகிச்சை! நலமுடன் இருப்பதாக அப்போலோ தகவல்!

மதுரை செந்தமிழ் கல்லூரிச் செயலராக ச. தசரதராமன் பொறுப்பேற்பு!

SCROLL FOR NEXT