மருத்துவரை தாக்கிய வழக்கு இருவருக்கு 7 ஆண்டு சிறை
ஆரணி அருகே மருத்துவரை தாக்கியதாக 2 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆரணியை அடுத்த வடமாதிமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ராஜேஷ்கண்ணா.
கடந்த 2009ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி அணைப்பேட்டையைச் சேர்ந்த எம்ஜிஆர் (65), கருங்காலிகுப்பத்தைச் சேர்ந்த பழனி (42) ஆகிய இருவரும் மருத்துவர் ராஜேஷ் கண்ணாவிடம் சென்று, விபத்தில் காயம் அடைந்த சிலருக்கு சிகிச்சை அளிக்கும்படி அழைத்தனராம்.
அப்போது காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்து வருமாறு கூறிய மருத்துவரை இருவரும் தாக்கினராம்.
புகாரின்பேரில் களம்பூர் போலீஸார் வழக்குப் பதிந்து, ஆரணி உதவி அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கில் இருவருக்கும் 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி எஸ்.கணேசன் சனிக்கிழமை தீர்ப்பளித்தார்.