சுற்றி திரியும்மாடுகளால் தொல்லையோ தொல்லை!
செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் சுற்றித் திரியும் மாடுகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும், கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் சுற்றித் திரியும் மாடுகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும், கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 44 கிராம ஊராட்சிகள் உள்ளன.
இந்த நிலையில் பல்வேறு காரணங்களுக்காக கிராம ஊராட்சி மன்றத் தலைவர்கள், கிராம பொதுமக்கள் உள்ளிட்டோர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு தினசரி வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் அலுவலகத்தில் மாடுகள் கட்டுப்பாடு இன்றி மேய்கின்றன. அப்போது அங்கு ரும் பொதுமக்களை மாடுகள் முட்டுகின்றன. அங்கு நிறுத்தப்படும் வாகனங்களை கீழே தள்ளி சேதமடையச் செய்கின்றன. இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள், மாடுகளின் தொல்லையால் அலுவலக வளாகத்தில் வாகனங்களை நிறுத்த அச்சப்பட்டு வருகின்றனர். அதைத் தொடர்ந்து ஊராட்சி அலுவலகத்தில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் அலுவலர், அலுவலக உதவியாளர் இல்லாத நேரத்தில் சில தினங்களுக்கு முன் இரண்டு மாடுகள் உள்ளே சென்று ரூ.60 லட்சம் செலவில் கட்டப்பட்ட கட்டடங்களுக்கான பில் தொகை எழுத்தப்பட்டிருந்த ரசீதுகளை இழுத்து சேதப்படுத்தி உள்ளன.
இதனால் சம்பந்தப்பட்ட அரசு ஓப்பந்ததாரர், அந்த பில்தொகையை வாங்க முடியாத நிலை உருவாகியுள்ளது. எனவே வட்டார வளர்ச்சி அலுவலர் நடவடிக்கை எடுத்து செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுற்றித் திரியும் மாடுகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டுமென பொதுமக்களும், ஒப்பந்ததாரர்களும், கிராம ஊராட்சித் தலைவர்களும் எதிர்பார்க்கின்றனர்.