முகப்பு
கிரிக்கெட்

டேரில் மிட்செல் மீது பந்தை எறிந்த அர்ஷ்தீப் சிங்குக்கு அபராதம்!

டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் மீது பந்தை எறிந்த விவகாரத்தில் அர்ஷ்தீப் சிங்குக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 10 மார்ச், 2026 at 6:31 PM
பந்தை எறிந்த பிறகு வேகப் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங்குடன் பேசும் கள நடுவர் - படம் | AP
பகிர்:

டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் மீது பந்தை எறிந்த விவகாரத்தில் அர்ஷ்தீப் சிங்குக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாதில் நேற்று முன் தினம் (மார்ச் 8) நடைபெற்றது. இந்தப் போட்டியில் 96 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

இறுதிப்போட்டியின்போது, நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் மீது வேகப் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் பந்தை எறிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. நியூசிலாந்து அணி பேட்டிங் செய்யும்போது, 11-வது ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். டேரில் மிட்செல் பந்தை தடுத்து சற்று கிரீஸுக்கு வெளியே இருப்பார்.

Advertisement

அதனால், அர்ஷ்தீப் சிங் பந்தை ஸ்டம்புக்கு எறிய முயற்சிசெய்து, டேரில் மிட்செலின் காலில் பட்டிருக்கும். இதனால், டேரில் மிட்செல் மிகவும் கோபமாகி கத்தியிருப்பார். ஆனால், தவறுதலாக பந்தை மிட்செல் மீது எறிந்ததற்கு எந்த ஒரு கவலையுமின்றி, அர்ஷ்தீப் சிங் அடுத்த பந்தை வீச சென்றிருப்பார்.

இதற்கிடையில், இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் டேரில் மிட்செலிடம் பேசி, நிலைமையின் தீவிரத்தைக் குறைப்பார். நடுவரும் அர்ஷ்தீப் சிங்கிடம் பேச, அவர் டேரில் மிட்செலிடம் சென்று கைகுலுக்கி நிலைமை சீராகியிருக்கும்.

இந்த நிலையில், நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் மீது ஆக்ரோஷமாக பந்தை வீசியதற்காக அர்ஷ்தீப் சிங்குக்கு போட்டி ஊதியத்திலிருந்து 15 சதவிகிதத்தை ஐசிசி அபராதமாக விதித்துள்ளது.

டேரில் மிட்செலை சமாதானப்படும் கள நடுவர் - படம் | AP

மேலும், அர்ஷ்தீப் சிங்குக்கு மெரிட் புள்ளி ஒன்றையும் ஐசிசி குறைத்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் அர்ஷ்தீப் சிங் மீது எடுக்கப்படும் முதல் ஒழுங்கு நடவடிக்கை இதுவாகும்.

அபாராத் தொகையை செலுத்த அர்ஷ்தீப் சிங் ஒப்புக்கொண்டதால், அவர் இந்த விவகாரம் தொடர்பாக எந்த ஒரு சட்டரீதியான அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தேவையில்லை.

summary

Arshdeep Singh has been fined for throwing the ball at New Zealand's Daryl Mitchell in the final of the T20 World Cup.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.