முகப்பு
திருவண்ணாமலை

செய்யாற்றில் கொட்டப்படும் கட்டடக் கழிவுகள்பொதுப் பணித் துறை நடவடிக்கை எடுக்குமா?

செங்கத்தில் ஓடும் செய்யாற்றுப் பகுதி குப்பைக் கிடங்காக மாறி வருகிறது. இதைத் தடுக்க பொதுப் பணித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:03 AM
பகிர்:

செங்கத்தில் ஓடும் செய்யாற்றுப் பகுதி குப்பைக் கிடங்காக மாறி வருகிறது. இதைத் தடுக்க பொதுப் பணித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

செங்கம் பகுதியில் ஜவ்வாதுமலையில் இருந்து சிறு, சிறு ஓடைகளாக வரும் தண்ணீர், கிளையூர் மலைக் கிராமத்தில் இருந்து குப்பநத்தம், கொட்டாவூர், பரமனந்தல், செங்கம், மண்மலை, செ.நாச்சிப்பட்டு, கொட்டகுளம், காஞ்சி வழியாக கலசப்பாக்கம் ஆற்றில் இணைகிறது.

இந்த செய்யாற்றில் மழைக்காலத்தில் தண்ணீர் வந்தால் சுமார் 20-க்கும் மேற்பட்ட ஏரிகள் விரைந்து நிரம்பும். இதனால் செங்கம் பகுதியில் விவசாயம் செழிப்பாக இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளாக செங்கம் பகுதியில் போதுமான மழை இல்லை. மேலும் மலையில் இருந்து வரும் மழை நீர் குப்பநத்தம் நீர்த் தேக்கத்தில் தேக்கப்படுகிறது.

இதனால் செங்கம் பகுதியில் ஓடும் செய்யாற்றுக்கு அதிக அளவு தண்ணீர் வருவதில்லை.

இதைப் பயன்படுத்தி செங்கம், துக்காப்பேட்டை, மண்மலை ஆகிய பகுதிகளில் உள்ளவர்கள் பழைய, பழுதடைந்த கட்டடங்களின் கழிவுகளை செய்யாற்றில் கொட்டிக் குவித்து வருகின்றனர்.

செய்யாற்றின் சில பகுதிகளில் பொக்லைன் இயந்திரம் மூலம் சமன்படுத்தி விளை நிலங்களாக மாற்றப்படுகிறது.

செய்யாற்றின் நடுவே கிணறு தோண்டுவது போன்ற செயல்களையும் செய்து வருகின்றனர். அதற்கும் மேலாக சில இடங்களில் செய்யாற்றை ஆக்கிரமித்து அடுக்குமாடிக் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

இதனால் செங்கம் செய்யாற்றின் பரப்பளவு நாளுக்கு நாள் சுருங்கி வருகிறது.

இதே நிலை நீடித்தால் சில வருடங்களில் செய்யாறு காணாமல் போய் ஆக்கிரமிப்புகளின் பிடியில் கட்டடங்களாகவும், விளை நிலங்களாகவும் மாறும் நிலை உள்ளது.

எனவே பொதுப்பணித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி குப்பை, கட்டடக் கழிவுகளைக் கொட்டுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முழு கட்டுரையைப் படிக்க →