திருவண்ணாமலை

பள்ளிப் பரிமாற்ற திட்ட நிகழ்ச்சி

DIN

நகர்ப்புற பள்ளி மாணவர்களுடன் கிராமப்புற பள்ளி மாணவர்கள் இணைந்து கல்வி கற்கும் பள்ளி பரிமாற்ற திட்ட நிகழ்ச்சி வந்தவாசி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, இந்த பள்ளியைச் சேர்ந்த 8-ஆம் வகுப்பு மாணவிகள் 20 பேர், தெள்ளாறு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் (ஆதிதிராவிடர் குடியிருப்பு) சேர்ந்த 8-ஆம் வகுப்பு மாணவிகள் 20 பேர் என மொத்தம் 40 மாணவிகள் இணைந்து கல்வி கற்றனர். இவர்களுக்கு கணிதப் பாடம், யோகா பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
பள்ளித் தலைமை ஆசிரியை எஸ்.பானுமதி தலைமை வகித்து, பயிற்சியை தொடக்கி வைத்தார். உதவித் தலைமை ஆசிரியர்கள் பெ.இராமதாஸ், எஸ்.சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியை கோ.பத்மாவதி வரவேற்றார்.
கணித ஆசிரியர்கள் அ.வெண்ணிலா, எம்.தர்மலிங்கம், 
கோ.பத்மாவதி, இ.சீத்தளாதேவி, எஸ்.சந்தானலட்சுமி ஆகியோர் புதிய கற்பித்தல் உத்திகளை பயன்படுத்தி கணித பயிற்சி அளித்தனர். மேலும், உடற்கல்வி ஆசிரியை பி.புனிதா யோகா பயிற்சி அளித்தார்.
வந்தவாசி வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் கோ.மீனா, திட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.ரேவதி, ஆசிரியர்கள் எஸ்.நெடுமாறன், பி.ராஜசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஸ்ரீதேவியின் புதல்வி!

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

SCROLL FOR NEXT