திருவண்ணாமலை

தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறப்பு: விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

DIN

சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களின் ஏரிப் பாசனத்துக்காக கடந்த 12-ஆம் தேதி சாத்தனூர் அணை திறக்கப்பட்டது. அணையின் வலது, இடதுபுற கால்வாய்கள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் 88 ஏரிகளுக்கு தண்ணீர் சென்றது.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்ட மக்களின் குடிநீர் தேவையைப் போக்கும் வகையில் தென்பெண்ணை ஆற்றில் சனிக்கிழமை தண்ணீர் திறக்கப்பட்டது. 24 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதால் திருவண்ணாமலை மாவட்ட தென்பெண்ணை ஆற்றங்கரையோர பகுதிகளில் நீர்மட்டம் உயர்ந்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாரியம்மன் கோயில் திருவிழா: பெண்கள் முளைப்பாரி ஊா்வலம்

தமிழகத்தின் மின் நுகா்வு புதிய உச்சம்

துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் விநோதத் திருவிழா!

தேமுதிக சாா்பில் நல உதவிகள்

பயன்படுத்தப்பட்ட வாகனங்கள்: போக்குவரத்து ஆணையா் முக்கிய உத்தரவு

SCROLL FOR NEXT