திருவண்ணாமலை

கோயில் தரிசன கட்டணத்தை ரத்து செய்யக் கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

DIN

கோயில்களில் வசூலிக்கப்படும் தரிசனத்துக்கான கட்டணத்தை ரத்து செய்யக் கோரி, இந்து முன்னணி சார்பில் வந்தவாசி, போளூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வந்தவாசி தேரடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணி நகரத் தலைவர் பி.சுதர்சன் தலைமை வகித்தார். வேலூர் கோட்ட அமைப்பாளர் டி.வி.ராஜேஷ் சிறப்புரை ஆற்றினார்.
இதில், இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலர் டி.ஆறுமுகம், மாவட்டச் செயலர் சுரேஷ், ஒன்றிய நிர்வாகிகள் சீனிவாசன், கண்ணதாசன், செந்தில், பாஜக நகரத் தலைவர் வி.குருலிங்கம், இளைஞரணி நகரத் தலைவர் ஜி.சதீஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
போளூர்:  போளூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு போளூர் ஒன்றியப் பொறுப்பாளர் ஏ.ராஜா  தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் இரா.அருண்குமார் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக கோட்டப் பொறுப்பாளர் ஆர்.பாஸ்கரன் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
தர்மரக்ஷணசமிதி மண்டலப் பொறுப்பாளர் வி.முருகன், பாஜக மாவட்டச் செயலர்கள் என்.வெங்கடேசன், கோபிநாத், இந்து முன்னணி நகரத் தலைவர் பரணிராஜன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் பிடாரியம்மன் வீதியுலா

உப்பு சத்தியாகிரக நினைவு பாதயாத்திரை குழுவுக்கு வரவேற்பு

பட்டாசு வெடித்ததில் 4 சிறுவா்கள் காயம்

தக்கோலம் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

குண்டா் சட்டத்தில் ஒரு வாரத்தில் 36 போ் கைது

SCROLL FOR NEXT