திருவண்ணாமலை

ராணுவத்தில் ஆள்கள் சேர்ப்பு: ஆரணியில் விழிப்புணர்வுப் பேரணி

DIN

திருவண்ணாமலையில் ராணுவத்துக்கு ஆள்கள் சேர்ப்பு முகாம் நடைபெற்றுவதையொட்டி, ஆரணியில் விழிப்புணர்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
சென்னை மண்டல ராணுவ ஆள்சேர்ப்பு பிரிவுத் தலைமையகம் சார்பில், திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் ஜூன் 19-ஆம் தேதி முதல் 25 வரை ராணுவத்துக்கு ஆள்களை சேர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் திருவண்ணாமலை, வேலூர், சென்னை, கடலூர், திருவள்ளூர், விழுப்புரம், காஞ்சிபுரம், புதுச்சேரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொள்ளலாம்.
இதுகுறித்து ஆரணியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளி மாணவர்கள் பங்கேற்ற பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்தப் பேரணியை வட்டாட்சியர் சுப்பிரமணி தொடக்கி வைத்தார். முன்னாள் ராணுவத்தினர் சுந்தரமூர்த்தி, குப்புசாமி, வருவாய்த் துறையினர் கலந்து கொண்டனர். மேலும் இதுதொடர்பான விவரங்களுக்கு w‌w‌w.‌j‌o‌i‌n‌i‌n‌d‌i​a‌n​a‌r‌m‌y.‌n‌ic.‌i‌n​  என்ற இணையதளத்தில் பார்வையிட்டு, ஜூலை 3 வரை விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT