திருவண்ணாமலை

சிறு வயது திருமணம் தடுத்து நிறுத்தம்

DIN

தானிப்பாடி அருகே திங்கள்கிழமை பிளஸ் 1 மாணவிக்கு நடைபெற இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
தானிப்பாடியை அடுத்த மேல்பாச்சார் கிராமத்தைச் சேர்ந்த விவசாயியின் மகளான 17 வயது பள்ளி மாணவிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி பாண்டியன் (22) என்பவருக்கும் திங்கள்கிழமை திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
மாணவியின் வீட்டிலேயே நடைபெற இருந்த திருமணம் குறித்து வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, தண்டராம்பட்டு வட்டாட்சியர் சஜேஷ்பாபு தலைமையில், கிராம நிர்வாக அலுவலர்கள் சம்பத், முத்து, சிவலிங்கம், நரசிம்மன், காவல் ஆய்வாளர் மதியரசன் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை இரவு திருமண வீட்டாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும், 18 வயது பூர்த்தியடையாமல் பெண்ணுக்கு திருமணம் செய்வது தவறு என்பதை அதிகாரிகள் எடுத்துக் கூறி, திருமணத்தை நிறுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT