திருவண்ணாமலை

2-ஆவது நாளாக மறியல்: சத்துணவு ஊழியர்கள் 445 பேர் கைது

DIN

திருவண்ணாமலையில் 2-ஆவது நாளாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 445 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை அண்ணா சிலை எதிரே புதன்கிழமை தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாநில துணைத் தலைவர் அண்ணாதுரை தலைமை வகித்தார். போராட்டத்தின்போது, தமிழகத்தில் 8-ஆவது ஊதியக் குழுவை உடனே அமல்படுத்த வேண்டும். 8-ஆவது ஊதியக்குழுவை அமல்படுத்தும்போது சத்துணவு ஊழியர்களை நிரந்தரமாக்க வேண்டும். சத்துணவுத் திட்டத்துக்கு தனி துறையை ஏற்படுத்த வேண்டும்.
சத்துணவுத் துறையில் 33 ஆண்டுகள் பணி செய்து ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர்களுக்கு பணிக்கொடையாக ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதனால் அண்ணா சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே, மறியலில் ஈடுபட்ட 365 பெண்கள் உள்பட மொத்தம் 445 பேரை போலீஸார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்ட அனைவரும் தொடர்ந்து 3-ஆவது நாளாக வியாழக்கிழமையும் சாலை மறியிலில் ஈடுபடப்போவதாகத் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் 5 பேருக்கு வெஸ்ட் நைல் காய்ச்சல்!

பூவே.. செம்பூவே..!

வாக்களித்த பிரபலங்கள்!

ஜெயக்குமார் உடல் கூறாய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

SCROLL FOR NEXT