திருவண்ணாமலை

நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

DIN

சாலைப் பராமரிப்புப் பணிகளைத் தனியாரிடம் அளிக்கும் புதிய சாலை மேம்பாட்டுத் திட்டத்தைக் கைவிடக் கோரி, வந்தவாசி உள்கோட்ட தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கம் சார்பில் மக்கள் சந்திப்பு ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
வந்தவாசி தேரடியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வந்தவாசி உள்கோட்டத் தலைவர் டி.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். மாநிலச் செயலர் ஆர்.சண்முகம், கோட்டத் தலைவர் ஆர்.ஆல்அரசன், கோட்டச் செயலர் கே.எம்.உதயகுமார், கோட்டப் பொருளாளர் எல்.சரவணன், உள்கோட்டச் செயலர் டி.ரவி, உள்கோட்டப் பொருளாளர் எஸ்.ராஜி, உள்கோட்ட துணைத்
தலைவர் ஈ.குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
டாஸ்மாக் மதுக் கடைகளை திறப்பதற்காக மாநில, மாவட்ட நெடுஞ்சாலைகளை மாநகராட்சி, நகராட்சியிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிட வேண்டும். காலியாக உள்ள சாலைப் பணியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மரணமடைந்த சாலைப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும். மதுக் கடைகள் மூடப்பட்டதால் பாதிக்கப்பட்டுள்ள டாஸ்மாக் பணியாளர்களுக்கு அரசுத் துறையில் மாற்றுப் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

SCROLL FOR NEXT