மின்சாரம் பாய்ந்து விவசாயி சாவு
போளூரை அடுத்த ராந்தம் கிராமத்தில் மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தார்.
போளூரை அடுத்த ராந்தம் கிராமத்தில் மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தார்.
போளூரை அடுத்த ராந்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் ஜெயபாலன் (25). இவருக்குச் சொந்தமாக அலங்காரமங்கலம் பகுதியில் 3 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தை சுற்றிப் பார்த்துவிட்டு வருவதாக தனது தாயார் ஜெயலட்சுமியிடம் கூறிவிட்டு, ஜெயபாலன் செவ்வாய்க்கிழமை காலை சென்றார்.
செவ்வாய்க்கிழமை மாலை வரை அவர் வீட்டுக்குத் திரும்பி வராததால் உறவினர்கள், நண்பர்களிடம் ஜெயலட்சுமி விசாரித்துள்ளார்.
இந்த நிலையில், புதன்கிழமை பிற்பகல் அலங்காரமங்கலம் காட்டில் இளைஞர் ஒருவர் சடலமாகக் கிடப்பதாக ஆடு, மாடு மேய்ப்பவர்கள் தகவல் அளித்தனர். அங்கு சென்று பார்த்தபோது, ஜெயபாலன் உடலில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து போளூர் காவல் நிலையத்தில் ஜெயலட்சுமி புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.