முகப்பு
திருவண்ணாமலை

ஆரணியில் இன்று வீடு தேடி சட்ட உதவி முகாம் தொடக்கம்

ஆரணி, ஆரணியைச் சுற்றியுள்ள கிராமங்களில் வீடு தேடி சட்ட உதவி முகாம் வியாழக்கிழமை (நவ.9) தொடங்கி வரும் 18-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:05 PM
பகிர்:

ஆரணி, ஆரணியைச் சுற்றியுள்ள கிராமங்களில் வீடு தேடி சட்ட உதவி முகாம் வியாழக்கிழமை (நவ.9) தொடங்கி வரும் 18-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தேசிய சட்டப் பணிகள் தினத்தை முன்னிட்டு, தேசிய சட்டப் பணிகள் உத்தரவின்
பேரில், திருவண்ணாமலை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவரும், மாவட்ட நீதிபதியுமான பி.மகிழேந்தி, ஆரணி வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவரும், சார்பு நீதிபதியுமான எஸ்.எழில்வேலவன் ஆகியோரின் மேற்பார்வையில், ஆரணியைச் சுற்றியுள்ள கிராமங்களில் வீடு தேடி சட்ட உதவி முகாம் வியாழக்கிழமை (நவ.9) தொடங்கி வரும் 18-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி, ஒவ்வொரு வீடுதோறும் சட்ட தன்னார்வலர்கள் மூலமாக சட்ட உதவி குறித்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. பொதுமக்கள் தங்கள் பிரச்னைகளுக்கு இந்த முகாம் மூலம் உடனடி தீர்வு காணலாம்.
முகாமில் இலவசமாக வழக்குகளை நடத்தவும், சட்டப் பிரச்னைகள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்படும். முகாமுக்கான ஏற்பாடுகளை ஆரணி வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் வி.வெங்கடேசன், வழக்குரைஞர் சங்க முன்னாள் தலைவர்
ஏ.சிகாமணி, ஆரணி வட்ட சட்டப் பணிகள் குழு நிர்வாக அலுவலர் அண்ணாமலை உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →