திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் ஓய்வூதியர்கள் தர்னா

DIN

திருவண்ணாமலையில் 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஓய்வூதியர்கள் செவ்வாய்க்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில், திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே இந்தப் போராட்டம் நடைபெற்றது. 
சங்கத்தின் மாவட்டத் தலைவர் அ.அருண்பாஷா தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் சி.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.
மாநிலச் செயற்குழு உறுப்பினர் கி.பால்ராஜூ வரவேற்றார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கோ.வேடியப்பன் தர்னா போராட்டத்தை தொடக்கி வைத்துப் பேசினார். சங்கத்தின் மாநில பொதுச் செயலர் ஜெ.ராஜா கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் ஊதியக்குழு அலுவலர்களின் பரிந்துரைகளை உடனே வெளியிட வேண்டும். மத்திய அரசு வழங்கியதைப்போல தமிழக அரசு ஓய்வூதியர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரு.9 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்பட 9 அம்சக் 
கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விதிமீறல்: 30 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை

கழுகுமலையில் மழை வேண்டி மாணவி யோகாசனம்

பாமக மாவட்ட செயலருக்கு கொலை மிரட்டல்: காவல் ஆணையா் அலுவலகத்தில் மனு

அவிநாசி கோயிலில் 53 கிராம் தங்கம், ரூ.27.68 லட்சம் பக்தா்கள் காணிக்கை

குழந்தைகளுக்கு கல்வியுடன் பக்தியையும் கற்றுக் கொடுக்க வேண்டும்: இயக்குநா் பேரரசு

SCROLL FOR NEXT