திருவண்ணாமலை

கல்லூரியில் வணிகவியல் துறை கருத்தரங்கம்

DIN

ஆரணி டாக்டர் எம்ஜிஆர் சொக்கலிங்கம் கலைக் கல்லூரியில் வணிகவியல் துறை கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்குக்கு கல்லூரிச் செயலர் ஏ.சி.ரவி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் டாக்டர் கோ.சுகுமாறன் முன்னிலை வகித்தார். இதில், ஆர்க்காடு ஸ்ரீமகாலட்சுமி மகளிர்  கலைக் கல்லூரி முதல்வர் டி.சிவா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடையே இந்திய பொருளாதாரத்தில் ஜி.எஸ்.டி வரியின் தாக்கம் என்ற தலைப்பில், ஜிஎஸ்டியின் நன்மைகளும், தீமைகளும் மற்றும் இந்திய பொருளாதார முன்னேற்றம், ஜிஎஸ்டி வரி விதிப்பின் கோட்பாடுகள், வணிக ரீதியாக அரசாங்கத்துக்கு கிடைக்கும் வருமானம் குறித்து விளக்கினார்.
இதில், வணிகவியல் துறைத் தலைவர் என்.நந்தகுமார், பிற துறைத் தலைவர்கள் கா.கிருஷ்ணமூர்த்தி, மு.சு.டில்லிராணி, பிரபு, சம்புவராயன், கணபதி, விஜயலட்சுமி, வெங்கடாசலம், தீபா மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஸ்ரீதேவியின் புதல்வி!

SCROLL FOR NEXT