திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் தீபாவளி விற்பனை விறுவிறுப்பு: போக்குவரத்து நெரிசலால் மக்கள் பாதிப்பு

DIN

திருவண்ணாமலை நகர துணிக் கடைகள், இனிப்பு மற்றும் பட்டாசுக் கடைகளில் செவ்வாய்க்கிழமை விறுவிறுப்பான விற்பனை நடைபெற்றது.
ஒரே நேரத்தில் ஏராளமானோர் திரண்டதால் திருவண்ணாமலை நகரச் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நாடு முழுவதும் புதன்கிழமை (அக். 18) தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், கடந்த சில நாள்களாகவே தீபாவளி பண்டிகைக்குத் தேவையான புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள் வாங்க கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
திருவண்ணாமலையில்: இந்த நிலையில், திருவண்ணாமலை நகரில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் ஏராளமானோர் குவியத் தொடங்கினர். திருவண்ணாமலை தேரடித் தெரு, திருவூடல் தெரு, பெரிய தெரு, காந்தி சிலை, அண்ணா சிலை, காமராஜர் சிலை, திருவள்ளுவர் சிலை, வேங்கிக்கால் பகுதிகளில் உள்ள இனிப்புக் கடைகள், துணிக் கடைகள், பட்டாசுக் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதத் தொடங்கியது.
மாலை 4 மணிக்குப் பிறகு கடைகளில் அலைமோதிய கூட்டத்தின் அளவு 3 மடங்காக அதிகரித்தது. அனைத்துக் கடைகளிலும் விறுவிறுப்பான வியாபாரம் நடைபெற்றதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கடும் போக்குவரத்து நெரிசல்: அதேநேரத்தில், திருவண்ணாமலை சின்னக்கடை தெரு, பெரியார் சிலை, காந்தி சிலை, தேரடித் தெரு, திருவூடல் தெருக்களில் செவ்வாய்க்கிழமை காலை முதலே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆட்டோக்களும், இருசக்கர வாகன ஓட்டிகளும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தனர். ஒரு தெருவைக் கடக்க அதிகபட்சமாக 45 நிமிடங்கள் வரை ஆனது.
சாலையோர வியாபாரம் விறுவிறுப்பு: இதேபோல, திருவண்ணாமலை தேரடித் தெருவில் ஏராளமான தாற்காலிக சாலையோர துணிக் கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்தக் கடைகளில் செவ்வாய்க்கிழமை காலை முதலே விறுவிறுப்பான விற்பனை நடைபெற்றது. ஏழைகள், நடுத்தர மக்கள் இந்த தாற்காலிகக் கடைகளில் தங்களது பட்ஜெட்டுக்கு ஏற்ற துணி வகைகளை ஆர்வமுடன் எடுத்துச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி!

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

SCROLL FOR NEXT