முகப்பு
திருவண்ணாமலை

கூட்டுறவு வங்கித் தேர்தல்: 30 பேர் வேட்புமனு தாக்கல்

செய்யாறு - திருவத்திபுரம் நகரக் கூட்டுறவு வங்கித் தேர்தலில் போட்டியிட 30 பேர் வேட்புமனு தாக்கல்  செய்தனர்.  

Updated On : 10 ஏப்ரல், 2018 at 5:17 AM
பகிர்:

செய்யாறு - திருவத்திபுரம் நகரக் கூட்டுறவு வங்கித் தேர்தலில் போட்டியிட 30 பேர் வேட்புமனு தாக்கல்  செய்தனர்.  
செய்யாறு காந்தி சாலையில் திருவத்திபுரம் நகரக் கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் மொத்தம் 7,387 உறுப்பினர்கள் உள்ளனர். வங்கிக்கான கூட்டுறவுச் சங்கத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, நிர்வாக உறுப்பினர்கள், தலைவர், துணைத் தலைவர், இயக்குநர்கள் உள்பட 11 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். 
அதன்படி, தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து சங்க உறுப்பினர்கள் 30 பேர், தேர்தல் நடத்தும் அலுவலர் ஜோதிமுருகனிடம் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனர்.  வேட்பு மனுக்களின் பரிசீலனை செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 10) நடைபெறுகிறது. உறுப்பினர்கள் தேர்வுக்கான தேர்தல் புதன்கிழமை (ஏப்ரல் 11) நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.