திருவண்ணாமலை

அரசின் விவசாயத் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு

DIN


ஆரணியை அடுத்த புங்கம்பாடி கிராமத்தில் விவசாயிகளிடையே கலவை ஆதிபராசக்தி வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் அரசின் விவசாயத் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கலவை ஆதிபராசக்தி வேளாண்மைக் கல்லூரியின் இறுதியாண்டு மாணவர்கள் கிராமப்புற வேளாண்மை அனுபவ பயிற்சியின் கீழ், ஆரணியை அடுத்த புங்கம்பாடி கிராமத்தில் முகாமிட்டுள்ளனர். இவர்கள் அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகளுக்கு தேசிய வேளாண் தொழில்நுட்பத் திட்டத்தின் (என்.ஏ.டி.பி.) கீழ், நெல் நடவுக்குத் தேவையான கருவிகள், விதைகள் அனைத்தையும் அரசே வழங்குவது குறித்தும், பாரத பிரதமரின் பயிர்க் காப்பீடு திட்டம் குறித்தும் வெள்ளிக்கிழமை விளக்கிக் கூறினர்.
இதில், வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் ச.ஆப்ரகாம்பில்கேட்ஸ், மல்லிபிரதாப், ச.அறிவுடைநம்பி, ப.கார்த்தி, செ.கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வன விலங்குகளின் தாகம் தீா்க்க தொட்டிகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

SCROLL FOR NEXT