திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி: பல லட்சம் பணம் தப்பியது

DIN

திருவண்ணாமலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பல லட்சம் பணத்தை கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை பெரிய தெருவில் ஸ்டேட் வங்கிக் கிளையுடன் ஏடிஎம் மையம் இயங்கி வருகிறது. ஏடிஎம் மையத்தில் 2 பணம் வழங்கும் இயந்திரங்களும், ஒரு பணம் செலுத்தும் இயந்திரமும் உள்ளன. இந்த மையத்தின் காவலாளி வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு வேறு காவலாளியிடம் தகவல் தெரிவித்துவிட்டு வெளியே சென்றிருந்தாராம்.
காலை 6 மணிக்கு வங்கிக்கு வந்தபோது, ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து திருவண்ணாமலை நகர காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 
நகர காவல் துணைக் கண்காணிப்பாளர் அண்ணாதுரை தலைமையிலான போலீஸார் வந்து சோதனை செய்தனர்.
அப்போது, ஏடிஎம் இயந்திரம் சுக்குநூறாக உடைக்கப்பட்டு இருந்தது. ஆனால், ஏடிஎம் இயந்திரத்துக்கு உள்ளே இருக்கும் லாக்கர் இயந்திரத்தை உடைக்க முடியாததால் அதில் இருந்த பணத்தை திருட முடியாமல் மர்ம நபர்கள் தப்பிச் சென்றது தெரியவந்தது.
ஏடிஎம் மையத்தில் இரும்புக் கம்பிகள், கற்கள் சிதறிக் கிடந்தன. ஏடிஎம் மையத்தில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, தொப்பி, லுங்கி அணிந்த மர்ம நபர் உள்ளே நுழைந்து ஒவ்வொரு இயந்திரத்தையும் பார்த்துவிட்டு, சிசிடிவி கேமராக்களின் வயர்களை துண்டித்தது தெரியவந்தது.
இந்த விடியோ பதிவுகளை வைத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்தக் கொள்ளை முயற்சியில் பல லட்சம் பணம் தப்பியதாக வங்கி நிர்வாகம் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT