திருவண்ணாமலை

பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா

DIN

செங்கம் - குப்பனத்தம் சாலையில் உள்ள மகரிஷி மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, மாணவ, மாணவிகளிடையே உறியடித்தல், கையிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. இதில், கரும்பு, மஞ்சள், பல்வேறு பழங்களை வைத்து சுவாமிகளுக்கு படைத்ததுடன், பொங்கல் வைத்து வழிபட்டனர்.
பின்னர், பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி பள்ளி நிறுவனர் புவனேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. பள்ளித் தலைவர் மனோகரன் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி, பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார். 
நிகழ்ச்சியில் பள்ளிச் செயலர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் கார்த்தி, நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கார்த்திகேயன், அரங்கசாமி, ஆசிரியர் ராமஜெயம் மற்றும் மாணவ,  மாணவிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்: ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர்

கங்கனா ரணாவத் 73 ஆயிரம் வாக்குகள் முன்னிலை!

மக்களவைத் தேர்தல் நேரலை: விருதுநகரில் வெல்லப்போவது யார்?

அந்தமானில் பாஜக முன்னிலை

பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுக்குமா ஃபைசாபாத்?

SCROLL FOR NEXT