முகப்பு
திருவண்ணாமலை

மானிய விலையில் நெல் விதைகள்: விவசாயிகளுக்கு அழைப்பு

மானிய விலையில் நெல் விதைகள், நுண்ணூட்டக்கலவை பெற்று பயனடைய அனக்காவூர் வட்டார விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 9 ஜூலை, 2018 at 6:57 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

மானிய விலையில் நெல் விதைகள், நுண்ணூட்டக்கலவை பெற்று பயனடைய அனக்காவூர் வட்டார விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அனக்காவூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ், விவசாயிகளுக்கு 10 ஆண்டுகளுக்கு மேலாகிய ஐ.ஆர்.50, ஆடுதுரை 37 ரக விதைகளுக்கு ஒரு கிலோவுக்கு ரூ.10 மானியமும், 10 ஆண்டுகளுக்கு உள்பட்ட கோ.51 ரக விதைகளுக்கு ஒரு கிலோவுக்கு ரூ.20 மானியமும் வழங்கப்படுகிறது. நுண்ணூட்டக்கலவை 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது.
மேலும், வேளாண்மை பண்ணைக் கருவிகள் பெற உழவன் செயலி மூலம் விவசாயிகள் பதிவு செய்து, முன்னுரிமை அடிப்படையில் பண்ணைக் கருவிகளைப் பெற்று பயனடையலாம்  என தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.